Tuesday, May 20, 2008

(Forex Rate Comparision) ஃபாரெக்ஸ் டாலர் மாற்றவிலை ஒப்புமை செய்ய ஒரு எளிய உதவிப் பக்கம்

அமரிக்க டாலரை இந்தியாவிற்கு அனுப்ப உதவும் தளங்களின் இன்றைய கன்வெர்ஷன் ரேட்டை அருகருகே ஒப்புமை செய்து பார்க்க இங்கே கிளிக் செய்யவும் ..

Monday, May 19, 2008

ஒரு சிறுங்குறுங்கவிதைக் கேள்வி ?

கால்கள் வேகமா..
கார்கள் வேகமா..
இல்லை..
நொடியில்
உலகைச்
சுற்றிவர
நம்மோடிருக்கும்
அச்சாணியெது !

இணையதள விமர்சனம் : இந்தியா ரியல் எஸ்டேட் மேப்


இந்தியாவில் ஒரு வீடு வாங்க அலைந்த அலைச்சலில் அறிவுகளஞ்சியமாகவே ஆகிவிட்டேன். தேடியதில் அகப்பட்டது இந்த அருமையான தளம்.

இது ஒரு கூகுள் மேப் மேஷப் மாதிரியான தளம். புதியது போலிருக்கிறது. பட்டியல் பெரியதாக இல்லையென்றாலும் உபயோகிக்க வெகு அழகாக இருக்கிறது. இந்திய வரைபடத்தில் வீதிவரை சென்று பார்க்க முடிகிறது. துல்லியமாக சொத்துகளை குறிக்க தேட வழிவகுக்கிறது. கோவையை கூகுள் புறக்கணித்ததால் ...நல்லவேளை யாகூ மேப் கைகொடுத்தது :) ஆம் யாகூ மேப்பும் இதில் இருக்கிறது... ஏதோ பேய் வீடு மாதிரி ஒரு சேட் விண்டோ வேறு வைத்திருக்கிறார்கள்.

நிறையாக வைத்திருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கவேண்டி இருக்கிறது தேவையானதை. கொஞ்சம் பொறுமையும் வேண்டும் லோடாகும் சமயத்தில்.


மொத்தத்தில் இந்தியா ரியல் எஸ்டேட் மேப் ஒரு 'நிறைய பலகாரங்களை ஒழித்து வைத்திருக்கும் ஓரு சமையல் கட்டு' (சன் டீவி ஸ்டைலு.. :-) )


நன்றி,
செண்பா

வணக்கம் :) !

தமிழ்மணம் , தேன் கூடு படித்து படித்து அடுத்து படைக்கும் (படுத்தும்) ஆசையில் இந்த தளம். உங்கள் வாழ்த்துக்களும் , வருகைகளும் இந்த தளத்தை வளப்படுத்த விரும்புகிறேன்.

- செண்பா